திபெத்தில் உள்ள ப்ருக் பு சியாங் சாங்பு (Pruqpu Qiang Zangbu) ஆற்றின் கீழ் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாகப் புதிய தடுப்பு ஏரி (barrier lake) ஒன்று உருவாகியுள்ளதாக சீன அரசு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து ஏற்கனவே உருவாகியிருந்த தடுப்பு ஏரி ஒன்றில் நீர் இயல்பாக வடிந்து வந்த நிலையில், சனிக்கிழமை கண்காணிப்பு ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட ஆய்வில் மேலும் ஒரு மண்சரிவு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
முந்தைய தடுப்பு ஏரியில் இருந்து சுமார் 2.8 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்த மண்சரிவினால் விழுந்த இடிபாடுகள், ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்து புதிய ஏரியை உருவாக்கியுள்ளன.
இதனையடுத்து, நிலைமையை மதிப்பீடு செய்ய சீன அவசரக்கால முகாமைத்துவ அமைச்சு, நிபுணர்களை உடனடியாக ஒருங்கிணைத்துள்ளதுடன், ஜிரோங் துறைமுகத்துக்கு (Gyirong Port) அருகில் இருந்த மீட்புப் படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
