Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு – அரச ஊடக நிறுவனம் விளக்கம் கோரல்

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அரசாங்கத்திற்கும், அமைச்சர்களுக்கும் அபகீர்த்தி ஏற்படுத்தும் விதத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி ஊடகவியலாளர் பிரபாகரன் டிலக்சனுக்கு அரச ஊடக நிறுவனம் ஒன்றினால் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பிரமுகர்கள் சிலரால் குறித்த ஊடகவியலாளர் பணியாற்றும் அரச தொலைக்காட்சி நிறுவனத்துக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த ஊடகவியலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.

அண்மையில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார விஜயம் செய்தபோது நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது போராட்டத்தை செய்தி அறிக்கையிட்டமை, காணாமல் ஆக்கப்பட்டோர் ஒருவரது தாயின் அவலங்களை அமைச்சருக்கு வெளிப்படுத்தியமை,ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன யாழ் மாவட்ட செயலகத்திற்கு வருகைதந்த போது போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட பல காரணங்களை சுட்டிக்காட்டியே விளக்கம் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் எழுத்து மூலம் கோரப்பட்டால் ஊடக நிறுவனத்திற்கு விளக்கமளிக்க முடியும் என குறித்த ஊடகவியலாளரால் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு செய்ய முடியாது எனவும் இனி செய்தி அனுப்ப தேவையில்லை என்றும் ஊடக அடையாள அட்டையை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் குறித்த ஊடக நிறுவனத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஊடகவியலாளர் சுயாதீனமாக செயற்படும் நிலையில் ஏனைய ஊடகங்களுக்கு செய்தி அறிக்கையிட்டது தொடர்பாகவும், செம்மணி மனித புதைகுழி அகழ்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பிலும், குறித்த ஊடகவியலாளரின் தனிப்பட்ட சமூக வலைத்தள கணக்குகளின் செயற்பாடுகள் தொடர்பாகவும் தேசிய மக்கள் சக்தியினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குருவிட்ட சிறை மோதல்: இரு கைதிகளும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பம்!

ஆடி 2, 2026
இலங்கைஎங்கள் ஊர்

மலவத்தாவல வனப்பகுதியில் பெரும் தீ விபத்து; 10 ஏக்கருக்கும் மேல் சேதம்!

ஆனி 22, 2026
இலங்கைஎங்கள் ஊர்

காரைதீவு மாவடிப்பள்ளி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக கார் விபத்து

ஆடி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube