Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் என்னை கைதுசெய்யலாம் – நாமல்

புரட்டாதி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில்….

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு கிடையாது. நீதியமைச்சர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்களுடனும் அவர் தற்போது முரண்படுகிறார்.

கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் இரண்டு தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் எவ்வித பரிசோதனைகளுமின்றிய வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.

கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையில் அவருக்கு எதிராக எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம்.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் எங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களுக்காகவே நாங்கள் செயற்படுவதால் மக்களுக்காகவே எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கலவானை தமிழ் வித்தியாலயத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப வகுப்பறை திறப்பு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடுவல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – 25 வயது இளைஞர் உயிரிழப்பு!

ஆடி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிழப்பு!

வைகாசி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற வானிலையால் உயிரிழப்பு 7 ஆக அதிகரிப்பு!

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube