Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிகிச்சைபெற்று வீடு திரும்பிய இளைஞர் திடீரென உயிரிழப்பு

புரட்டாதி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற குறித்த இளைஞர், வீடு திரும்பிய நிலையில் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட மருந்துகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் தொடர்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. உயிரிழந்த இளைஞரின் உடலம் தொடர்பான பிரேத பரிசோதனையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் எமது செய்திப் பிரிவு வினவியது.

இளைஞரின் சிகிச்சையில் எந்தவிதமான சிக்கலும் ஏற்படவில்லை எனவும், அவரது உடல்நிலைக்கு ஏற்பவே மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது இளைஞருக்கு வழங்கப்பட்ட மருத்துவ அட்டை மற்றொருவருடையது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மருத்துவமனை ஊழியர்களால் மருத்துவ அட்டை தவறுதலாக மாற்றி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இளைஞரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறியும் வகையில் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பெறுபேறுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் – மீண்டும் போராட்டம் நடத்தப்படுமா?

ஆவணி 24, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

27,000 மில்லிலீற்றர் கசிப்புடன் இருவர் கைது

ஆவணி 27, 2026

பஹ்ரைன் மாம்பழத் திருவிழாவில் இலங்கை மாம்பழங்கள்!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube