நாட்டின் நீதித்துறை கட்டமைப்பை விரிவுபடுத்தி, அதனை மேலும் ஒழுங்குபடுத்தும் நோக்கில் அரசாங்கம் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தையும் நீதித்துறை (திருத்த) சட்டமூலத்தையும் சமர்ப்பித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சட்டமூலங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன இந்த விடயத்தை நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
