Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லம்பிட்டியவில் பாரியளவு போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான, சுமார் 12 கிலோகிராம் எடையுடைய ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நேற்று வெல்லம்பிட்டி – சேதவத்தை பகுதியில் சோதனை நடவடிக்க ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போதே குறித்த சந்தேகநபர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டப்பட்டது என சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபா ரொக்கப் பணமும் அவரிடமிருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவராவார்.

தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது, வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் இந்த போதைப்பொருள் , சந்தேகநபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மீட்பு, மறுசீரமைப்பு மற்றும் திவால்தன்மைச் சட்டமூலம் சட்டமாகியது

ஆனி 17, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

முதல்நாள் ஆட்டத்தில் தடுமாறிய இங்கிலாந்து அணி

ஆவணி 28, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

குறைந்த ஓய்வூதிய ஒப்பீட்டு அறிக்கை – இலங்கைக்கு 120 ஆவது இடம்

ஆவணி 28, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

அக்கிமீமனவில் மோட்டார் சைக்கிள் விபத்து: 27 வயது இளைஞர் உயிரிழப்பு!

ஆவணி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube