Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளுக்கு நிதியுதவியுடன் கூடிய விசாரணை

புரட்டாதி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் நிதியுதவியுடன்கூடிய முழுமையானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ப்ளக்மென் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி முதற்தடவையாகக் கண்டறியப்படுவதற்குக் காரணமாக அமைந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை செய்யப்பட்டு எதிர்வரும் திங்கட்கிழமையுடன் (07) 30 வருடங்கள் பூர்த்தியடைகின்றன.

இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் கருத்துரைத்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ப்ளக்மென், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையானது செம்மணி மனிதப்புதைகுழி கண்டறியப்படுவதற்குக் காரணமாக அமைந்ததாகவும், தற்போது அதிலிருந்து 600 க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மிகப்பெரிய மனிதப்புதைகுழியாக செம்மணி மாறியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இவ்விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதுமாத்திரமன்றி இவ்விடயம் தொடர்பில் நிதியுதவியுடன்கூடிய முழுமையானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு விரைவில் 104 புதிய METRO பேருந்துகள்!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயல் பாதிப்பு: விவசாயிகளுக்கு ரூ.12,341 மில்லியன் இழப்பீடு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் ரூ.20 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்!

ஆடி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube