Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கு : உடல்கள் கிடைக்காததால் மக்கள் கவலை

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவினால் உயிரிழந்த தங்களது உறவினர்களின் உடல்கள் கிடைக்காதமையினால் ” தர்ப்பைப் புல்’ உருவங்களை வைத்து இறுதிக்கிரியைகளை நேபாள மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மண்சரிவில் பலரும் புதையுண்டுள்ள நிலையில் மீட்புப்பணிகள் இடம்பெற்று வருகிறது. எனினும் தொடர்ச்சியான மழைவீழ்ச்சி காரணமாக சடலங்களை மீட்பதிலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது.

இத்தகுவரில் இந்த வெள்ளப்பெருக்கினால் சுமார் 5000 பேர் மாயமாகியுள்ளனர்.

இந்தநிலையில், உயிருடனோ அல்லது உடல்களாகவோ மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்ததை அடுத்து, பசுபதிநாத் கோயில் பகுதியில் உள்ள பாக்மதி ஆற்றங்கரையில் உறவினர்கள் கண்ணீருடன் இந்த முறைமையைப் பின்பற்றி வருகின்றனர்.

இந்து மத சாஸ்திரங்களின்படி உடல்கள் கிடைக்காத பட்சத்தில் தர்ப்பைப் புல்லால் உருவப் பொம்மையாக செய்து அதற்கு நீரளித்து முறைப்படி தகனம் செய்யும் சடங்குகள் நடத்தப்படுகின்றன.

இந்தநிலையில், வெள்ளத்தில் மீட்கப்படும் உடல்கள் சிதைந்து அழுகிய நிலையில் உள்ளதால் அவற்றைப் பாதுகாத்து வைப்பது காவல் துறைக்கு சவாலாக மாறியுள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட 1344 உடல்களில் 1030 உடல்கள் தற்காலிகமாகப் புதைக்கப்பட்டுள்ளன.

96 உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் – ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண் பிசியோதெரபிஸ்ட் மரணம் தொடர்பாக தலைமை காவல் ஆய்வாளர் கைது!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மாணவர் தாக்குதல்: ஒருவருக்கு பலத்த காயம்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பஸ்ஸில் பாலியல் தொல்லை: நடத்துனர் கைது

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube