Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

1980களின் பிற்பகுதியில் 10,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர் – ITJP புதிய தரவுத்தளம் வெளியீடு!

வைகாசி 16, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இலங்கையில் இந்திய அமைதிகாக்கும் படை (IPKF) நிலைகொண்டிருந்த 1980களின் இறுதிப்பகுதியில், கொல்லப்பட்ட அல்லது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய புதிய டிஜிட்டல் தரவுத்தளமொன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

‘சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்’ (International Truth and Justice Project – ITJP) அமைப்பு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணக்காப்பகத்தை (Home | Sri Lanka Casualties) பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வெளியிட்டுள்ளது.

1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் 1990 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்திய அமைதிகாக்கும் படையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களே இவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் ஆண்கள் என்பதுடன், இது வெறும் எண்ணிக்கை அல்ல, திட்டமிட்டு வரலாற்றிலிருந்து மறைக்கப்பட்ட மனித உயிர்களின் பதிவாகும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த வன்முறைகள் டிஜிட்டல் காலத்திற்கு முன்பு இடம்பெற்றதால் பாதிக்கப்பட்டவர்களின் முழுமையான விபரங்கள் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka),”திட்டமிட்டு அழிக்கப்பட்ட அடையாளங்களை மனித கண்ணியத்துடன் மீட்டெடுப்பதே தமது அமைப்பின் தற்போதைய பணி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “முப்பது வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், நடந்த கொடூரங்களுக்கு இதுவரை யாரும் பொறுப்புக்கூறலுக்கு உள்ளாக்கப்படவில்லை. தண்டனையின்றி தப்பிக்கும் இந்த நிலை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கப் போகிறது?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் தரவு ஆய்வுக்குழுவைச்’ (Human Rights Data Analysis Group) சேர்ந்த மிசேல் டுசிச் என்பவரின் ஆலோசனையின் கீழ், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள், சத்தியப்பிரமாணங்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் சர்வதேச தரத்திற்கு அமைய இந்தத் தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான விபரங்களை பிரதேசம், பாலினம், காலகட்டம் மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் மிக இலகுவாகத் தேடிப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார வேலியில் சிக்கி பெண்ணொருவர் பலி!

ஆனி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெற்றோர் வெளிநாட்டில் இருந்தால் பிள்ளைகளுக்கு 10,000/-!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் அதிகமாக பரவும் மூளை காய்ச்சல்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நூலிழையில் உயிர் தப்பிய 9 பேர்!

வைகாசி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube