Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சுகாதாரத் துறையில் நவீன தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகப்படுத்துவது மற்றும் இலங்கை – இந்தியாவுக்கிடையிலான சுகாதார பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக விஜேமுனி மற்றும் இந்தியாவின் சி-கேம்ப் உயிரியல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவரும் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான தஸ்லிமாரிஃப் சையத் உள்ளிட்ட குழுவினருக்கிடையில் அண்மையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், இலங்கையின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையைப் பலப்படுத்துதல், தொற்றா நோய்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைச் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற விடயங்கள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இந்திய அரசாங்கத்தின் உயிரியல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் கீழ் 2009 இல் ஆரம்பிக்கப்பட்ட ‘சி-கேம்ப்’ நிறுவனம், உலகளவில் 500 க்கும் மேற்பட்ட ஆரம்பத் தொழில்முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரும் முன்னணி சர்வதேச அமைப்பாகும்.

இச்சந்திப்பின் போது மரபியல் ஆராய்ச்சி, நோய் நிர்ணயக் கருவிகள் மற்றும் சுகாதாரத் தொழில்நுட்ப தயாரிப்புகளில் சி-கேம்ப் அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதி அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், இருநாடுகளுக்குமிடையிலான சுகாதாரத் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெலிக்கடை மெகசின் சிறைச்சாலைக்கைதி கொலை வழக்கின் விசாரணை இன்று!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் மேம்பட்ட சேவைகள் அறிமுகம்

ஆனி 25, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இலங்கையில் முதல் முறையாக AI ரோபோடிக் சத்திர சிகிச்சை

ஆடி 14, 2026
இலங்கைஉலகம்தொழில்நுட்பம்

புதிய கண்டுபிடிப்பால் உலகை வியக்க வைத்த இலங்கை இளைஞர்கள் – அவுஸ்திரேலியாவில் கிடைத்த உயரிய கௌரவம்!

ஆடி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube