Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மின்சார வாகன இலக்கத்தகடு – போதிய தெளிவின்றி ஓட்டுநரை விசாரித்த போக்குவரத்து பொலிஸார்

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மின்சார வாகனங்களுக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பச்சை நிற இலக்கத் தகடு குறித்து போக்குவரத்து பொலிஸார் போதிய தெளிவின்றி செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

வெளிவேரிய பகுதியில் தனது புதிய மின்சார வாகனத்தில் பயணித்த நபர் ஒருவரை இடைமறித்த போக்குவரத்து பொலிஸார், குறித்த பச்சை நிற இலக்கத் தகடு தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மின்சார வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடு குறித்து தாம் அறிந்திருக்கவில்லை என தெரிவித்த பொலிஸார், அது போலி இலக்கத் தகடா என்ற சந்தேகத்தில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட பதிவு உறுதிப்படுத்தல் குறுஞ்செய்தி மற்றும் ஏனைய சட்டப்பூர்வ ஆவணங்களை காண்பித்து, தனது வாகன இலக்கத் தகடு சட்டபூர்வமானது என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர், இதில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது மாத்திரம் குற்றம் சுமத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய நடைமுறைகள் மற்றும் சட்ட மாற்றங்கள் குறித்து போக்குவரத்து பொலிஸாருக்கு உரிய அதிகாரிகளால் சரியான முறையில் தெளிவுபடுத்தப்படாமமையே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் ஏனைய மின்சார வாகன உரிமையாளர்கள் இவ்வாறான தேவையற்ற அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் பொருட்டு, பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளார்.

அவற்றுள் நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் போக்குவரத்து பிரிவுகளுக்கும் மோட்டார் வாகன பதிவு மாற்றங்கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குதல் இது தொடர்பான அரச வர்த்தமானி அறிவித்தல்களின் பிரதிகளை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைப்பதை உறுதிசெய்தல் என்பவையாகும்.

இச்சம்பவமானது, நாட்டின் சட்ட அமுலாக்க அதிகாரிகளிடையே புதிய நடைமுறைகள் மற்றும் அடையாள அமைப்புகள் குறித்தான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முறையாகச் சென்றடைகிறதா என்ற கேள்வியை பொதுமக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய கடற்படை பிரதிப் பிரதானி மற்றும் இலங்கை கடற்படைத் தளபதியிடையே உத்தியோகபூர்வ சந்திப்பு

புரட்டாதி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி என்புகூடுகளை அறிவியல் ரீதியாக அடையாளம் காண அறிவுறுத்தல்

புரட்டாதி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஏமன் ஹவுதிகள், சவுதி எண்ணெய் தளங்களை குறிவைத்ததாக அறிவிப்பு!

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணத்தையும், கச்சதீவையும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் – அர்ச்சுனா ராமநாதன்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube