சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்குப் பதிலளிக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கண்டனம் தெரிவித்து, திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள், தொடர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.
இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டதுடன், அவை நடவடிக்கைகளிலும் பரபரப்பு ஏற்பட்டது.
