Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமலுக்கு வீட்டிலிருந்து உணவை பெற்றுக்கொள்ள அனுமதி

புரட்டாதி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவிற்கு வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாமல் ராஜபக்‌ஷ தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சேனக்க பல்லேதென்ன குறிப்பிட்டுள்ளார்.

எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்ததில் இலஞ்சம் பெற்றதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.பயண வழிகாட்டிகளைப் படி

சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதிக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு நாளைக்கு மூவர் மட்டுமே அவரைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்‌ஷவின் தாயாரான சிரந்தி ராஜபக்‌ஷ இன்று திங்கட்கிழமை (07) முற்பகல் சிறைச்சாலைக்குச் சென்று மகனின் நலன் குறித்து விசாரித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தனவும் இன்றையதினம் முற்பகல் நாமல் ராஜபக்‌ஷவைச் சந்திப்பதற்காகச் சிறைச்சாலைக்கு சென்றிருந்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பயணக் கொடுப்பனவை அதிகரிக்கக் கோரி கிராம உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அகில விராஜ் காரியவசதுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யால தேசிய பூங்காவில் துப்பாக்கிச்சூடு

ஆவணி 12, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

வட்டி இல்லா மாணவர் கடன் திட்டத்தில் பட்டப்படிப்பை தொடரும் வாய்ப்பு!

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube