Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு.!

#மன்னார் #பொதுச்சுகாதாரம் #சுகாதாரசீர்கேடு #மன்னார்செய்திகள் #மன்னார்மாவட்டம் #சுகாதாரவைத்தியஅதிகாரி #பொதுச்சுகாதாரவைத்தியஅதிகாரி #சுகாதாரம் #சுகாதாரத்துறை #SriLanka #Mannar #MannarNews #PublicHealth #HealthNews #Sanitation #TamilNews #TamilNewsSriLanka #BreakingNews #NewsUpdate #SriLankaNews #இலங்கைசெய்திகள் #முக்கியசெய்தி #செய்திஅறிக்கை

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மன்னார் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பு குப்பைகள் மற்றும் பொலித்தீன் கழிவுகள் முறையற்ற வகையில் கொட்டப்படுவதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, அப்பகுதியில் காணப்படும் கால்வாய்களில் பொலித்தீன் மற்றும் ஏனைய கழிவுகள் தேங்கி உள்ளதால், மழை நீர் உள்ளிட்ட நீர் முறையாக ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர் தேங்கி, நுளம்புகள் பெருகுவதற்கான சூழல் உருவாகியுள்ளதுடன், டெங்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதேவேளை, குறித்த பகுதியில் கடைகளை நடத்தி வரும் சில வியாபாரிகளால் அதிகளவான பொலித்தீன் கழிவுகள் சுற்றுச்சூழலில் வீசப்படுவதாகவும், முறையான கழிவு முகாமைத்துவம் இல்லாமையே இந்நிலைக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் தற்காலிகமாக குறித்த வடிகால்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும் நிரந்தரமாக குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை

சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டிய இடத்திற்கு முன்பு இவ்வாறான சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் கைது!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச் சூடு

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது!

ஆனி 30, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

32 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ், ஹெரோயினுடன் ஒருவர் கைது!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube