கொஹுவலை – களுபோவில பகுதியில் அமைந்துள்ள வீடொன்றினை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (09) இரவு 11:45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர்கள் கைக்குண்டை வீட்டின் கேட் வழியாக உள்ளே வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். கைக்குண்டு வெடித்ததில் வீட்டின் முன்பக்க ஜன்னல்கள் மற்றும் கண்ணாடிகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது வீட்டில் 56 வயதுடைய பெண் ஒருவர் மட்டுமே இருந்துள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை.
இத் தாக்குதலுக்கு இலக்கான வீடு, ‘தரிந்து ரவிஷான்’ என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
இவர் பெரும் அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘திஸாநாயக்க முதியான்சேலாகே அவிஷ்க ஏஷான்’ என்பவரின் நண்பர் என்றும், போதைப்பொருள் கடத்தல்காரரின் கூட்டாளிகளுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தவர் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் கொஹுவலை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
