ஹங்கேரி – புடாபெஸ்ட்டில் நடைபெற்ற World Athletics Ultimate Championship தொடரின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இலங்கையின் ருமேஷ் பதிரகே 91.09 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து முதலிடத்தைப் பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளார்.-
சர்வதேச அளவில் உலகின் முன்னணி வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியில், ருமேஷ் தரங்க தனது விசித்திரமான மற்றும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி 91.09 மீற்றர் என்ற பிரம்மாண்ட தூரத்தைப் பதிவு செய்தார்.
இதன் மூலம் உலக மெய்வல்லுநர் அரங்கில் வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ள அவர், இலங்கை விளையாட்டுத்துறை வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
ஏற்கனவே டைமண்ட் லீக் மற்றும் பொதுநலவாய போட்டிகளில் தங்கம் வென்று உலக அளவில் முதலிடத்தில் திகழும் ருமேஷ் தரங்க, இந்த வெற்றியின் மூலம் ஈட்டி எறிதல் விளையாட்டில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை உலகுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
