Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

இலங்கை அணியின் டி20 தோல்வி – அணியின் பலவீனம் தொடர்வில் சங்ககார கேள்வி

செப்டம்பர் 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி மீண்டும் தோல்வியை தழுவியுள்ள நிலையில், அணியின் வீரர் தேர்வு, முடிவெடுப்பதில் நிலைத்தன்மை மற்றும் உடற்தகுதி குறித்து முன்னாள் இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார கேள்வி எழுப்பியுள்ளார்.

போட்டிக்குப் பின்னரான ஆய்வின்போது கருத்து தெரிவித்த சங்கக்கார, இங்கிலாந்து அணியின் ஆதிக்கம் இரு அணிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக துடுப்பாட்டம், உடற்தகுதி மற்றும் போட்டி சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயற்படும் திறன் ஆகியவற்றில் இலங்கை அணி முன்னேற்றம் காண வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கமில் மிஷாரவை மூன்றாவதாக களமிறக்கியதுடன், இலங்கையின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக தான் கருதும் மகீஷ் தீக்ஷனவை அணியில் சேர்க்காதது குறித்தும் சங்கக்கார கேள்வி எழுப்பினார்.

சிறந்த வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வளர்ச்சிக்கான பகுதிகளை புரிந்துகொள்வது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

மேலும், உடற்தகுதி மற்றும் உடல் வலிமையை மேம்படுத்துவதுடன், துடுப்பாட்டத் திறனை பாதிக்காமல் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தும் திறனையும் இலங்கை வீரர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பந்துவீச்சில் போட்டி சூழ்நிலைகளை புரிந்துகொள்வது, அதற்கேற்ற உத்திகளை வகுப்பது மற்றும் களத்தடுப்பு அமைப்புகளை மாற்றியமைப்பது போன்ற அம்சங்களிலும் முன்னேற்றம் தேவை என அவர் சுட்டிக்காட்டினார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

செல்வச்சந்நிதி – கதிர்காமம் பாதையாத்திரை: இரு ஆலய வேல்களுடன் பக்தர்கள் யாத்திரை

ஜூன் 18, 2026
Uncategorized

அகதிகளை மீள்குடியேற்றும் பெயரில் பணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும் – பிரபாகரன்

அக்டோபர் 25, 2026
Uncategorized

எரிபொருள் செலவு உயர்வு; நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் 50% வரை குறைய வாய்ப்பு!

ஜூன் 7, 2026
Uncategorized

எரிபொருள் இறக்குமதி செலவு அதிகரிப்பு

அக்டோபர் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube