Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறந்துவிட்டதாக கருதப்பட்ட நபர் இறுதிச் சடங்கின் பின்னர் உயிருடன் வீட்டுக்கு திரும்பிய விசித்திரம்

புரட்டாதி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இறந்துவிட்டதாகக் கருதப்பட்டு, இறுதி சடங்குகள் முதல் ஆத்மசாந்திக்கான தானங்கள் வரை செய்து முடிக்கப்பட்ட நபரொருவர், சுமார் 02 மாதங்களின் பின்னர் திடீரென உயிருடன் வீட்டிற்குத் திரும்பிய விசித்திரமான சம்பவம் கொக்காவெவ பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட நபர் கடந்த 02 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். வழக்கமாக சில நாட்கள் வெளியே சென்று திரும்பும் வழக்கமுடையவர் என்பதால் குடும்பத்தினர் ஆரம்பத்தில் சந்தேகிக்கவில்லை. எனினும் ஒரு வாரத்திற்கு மேலாகியும் வராததால் அவரது மனைவி கொக்காவெவ பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி ஹபனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காப்பகப் பகுதியில் நஞ்சருந்தி உயிரிழந்த நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. புத்தாண்டிற்கு மகன் வாங்கிக் கொடுத்த ஆடைகளுடன் அச்சடலத்தின் ஆடைகள் ஒத்துப்போனதால், அது தனது கணவர்தான் என மனைவி மற்றும் உறவினர்கள் தவறாக அடையாளப்படுத்தினர்.

அதன்பின்னர், ஆகஸ்ட் 31 ஆம் திகதி பொலன்னறுவையில் அச்சடலம் அடக்கம் செய்யப்பட்டது. கடந்த 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் அவருக்குரிய மதரீதியான தான சடங்குகளும் குடும்பத்தினரால் செய்து முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்னணியில், உயிருடன் இருக்கும் அந்த நபர் பேருந்தில் பயணம் செய்து திடீரெனத் தனது சகோதரியின் வீட்டை சென்றடைந்துள்ளார்.

அவர் உயிருடன் மீண்டு வந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக இது குறித்துக் கொக்காவெவ பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட சடலம் யாருடையது என்பது குறித்தும், இந்தத் தவறுதலான அடையாளம் காண்பது குறித்தும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

தனமல்வில மற்றும் ஹம்பெகமுவவில் பாரிய கஞ்சா தோட்டங்கள் முற்றுகை!

ஆனி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 30 ஆம் திகதி நீர் கட்டணத்திருத்த மீளாய்வு நடவடிக்கை!

வைகாசி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

ஆடி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

20,30 ஆண்டுகளுக்கு தங்களது ஆட்சியை தக்கவைப்பதே இந்த அரசின் திட்டம் – நாமல் ராஜபக்ஷ

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube