நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, கட்டுநாயக்கவிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதில், லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
