Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொடரை 3-0 என கைப்பற்றி இங்கிலாந்து அணி

புரட்டாதி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இங்கிலாந்து அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இதன்படி, மான்செஸ்டரின் ஓல்ட் டிராஃபோர்ட்டில் (Old Trafford) நேற்று (19) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 24 பந்துகளில் 36 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 28 பந்துகளில் 35 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இங்கிலாந்தின் சொனி பேக்கர் (Sonny Baker), ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) மற்றும் வில் ஜாக்ஸ் (Will Jacks) ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

125 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதி செய்தது.

அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜோஸ் பட்லர் (Jos Buttler) 32 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்களையும் 2 ஆறு ஓட்டங்களையும் பெற்று மொத்தமாக 62 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

தலைவர் ஹரி புரூக் (Harry Brook) 33 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.

இதன்படி, 62 பந்துகள் (10.2 ஓவர்கள்) மீதமிருந்த நிலையில் பெற்ற இந்த வெற்றியுடன், இங்கிலாந்து அணி தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

மலையக மக்களின் காணி உரிமை, வீடமைப்பு மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள் ஜனாதிபதியிடம் முன்வைப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிலக்கரி தட்டுப்பாட்டினால் மின்தடை ஏற்படுத்தப்பட மாட்டாது – அனுர கருணாதிலக்க

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பரிசுப்பொதியில் வந்த போதைப்பொருள் – 10 கோடி ரூபாவுக்கும் அதிக மதிப்பு

ஆவணி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில இடங்களுக்கு ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube