Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்பு – மகன் கைது

புரட்டாதி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை அராலி மத்தி பகுதியில் 74 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (18) இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண்ணின் மகனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அராலி மத்தி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டில் சடலம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸார் நடத்திய சோதனையில் சடலத்தில் காயங்கள் காணப்பட்டமையினாலும், பொருட்கள் சிதறடிக்கப்பட்டிருந்தமையினாலும் சந்தேகம் உருவானது.

நீதிமன்ற உத்தரவின் பேரில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்றுப் பரிசோதனையில் இது கொலை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணும் அவரது மகனும் மட்டுமே வீட்டில் வசித்து வந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மகனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பல இலட்சம் ரூபா பண வீதியில் வீசியதுடன், பெருந்தொகை பணத்தை சேதப்படுத்தியவர் என்பதும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முச்சக்கர வண்டி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயதெல்லையை 25-35 ஆக திருத்துமாறு கோரிக்கை

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து ஒன்று மோதி கோர விபத்து – ஒருவர் பலி!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களை காணி உரிமையுடைய தோட்டத் தொழில்முனைவோராக மாற்றுவதே எங்கள் இலக்கு – சஜித் பிரேமதாச

ஆடி 28, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube