Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாதொழில்நுட்பம்

AI உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய குற்றவாளி

#AIதொழில்நுட்பம் #19ஆண்டுகளுக்குப்பிறகு #தலைமறைவு_குற்றவாளி #குற்றவாளி_கைது #காவல்துறை #தொழில்நுட்பம் #இலங்கை_செய்திகள் #AI #BreakingNews #SriLankaNews

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்
சென்னையில் கடந்த 2007ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபர், நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவொற்றியூர் பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு பாண்டியமணி என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, திருவொற்றியூர் காலடிப்பேட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது 20 வயதாக இருந்த ஷேக் அப்துல்லா, பின்னர் பிணையில் வெளியே வந்த நிலையில், காவல்துறையினரிடம் சிக்காமல் தலைமறைவானதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீண்டகாலமாக தலைமறைவாக உள்ள குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை விரைந்து கைது செய்ய சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, தனிப்படை காவல்துறையினர் ஷேக் அப்துல்லாவை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
2007ஆம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டபோது எடுக்கப்பட்ட நிழற்படத்தை அடிப்படையாகக் கொண்டு, சுமார் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் தற்போது எவ்வாறு இருப்பார் என்பதை கணிக்க நவீன AI உருவத் தொழில்நுட்பத்தின் உதவியை காவல்துறையினர் பயன்படுத்தியுள்ளனர்.
இதன்மூலம் தற்போது 39 வயதாகும் ஷேக் அப்துல்லாவின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்ட நிழற்படம் உருவாக்கப்பட்டு, அவரது அடையாளத்தைக் கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அந்த நிழற்படங்களை பயன்படுத்தி சமூக வலைத்தள கணக்குகள் மற்றும் அவர் முன்னர் வசித்த பகுதிகளில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதன்போது, ஷேக் அப்துல்லா திருமுல்லைவாயல், சோழம்பேடு மெயின் ரோடு பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருவது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, திருமுல்லைவாயல் பகுதியில் முகாமிட்ட தனிப்படை காவல்துறையினர், ஷேக் அப்துல்லாவை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிமன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்துள்ளனர்.
சுமார் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை நவீன AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்துள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இம்முறை IPL வீரர்களால் 57.6 கோடி நட்டம்!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகள் அமைதியின்மை தொடர்பில் கலந்துரையாடல்!

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதமரின் பொசன் வாழ்த்துச் செய்தி!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழு ஒன்றுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube