Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்

மிகப்பெரும் சிக்கலுக்குள்ளாகும் ஈரான் – அமெரிக்காவின் அதிரடி தீர்மானம்!

சித்திரை 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரானின் அனைத்துத் துறைமுகங்களுக்குமான கடல் வழிப் போக்குவரத்தையும் தடுத்து நிறுத்தும் ‘முற்றுகை’ (Blockade) நடவடிக்கையை இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பணியகம் (CENTCOM) அறிவித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் அமெரிக்க மற்றும் ஈரானியப் பிரதிநிதிகளுக்கிடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தீர்க்கமான உடன்பாடின்றி நிறைவடைந்ததையடுத்து, ஈரான் மீதான இந்த கடும் நடவடிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க நேரப்படி இன்று (13) காலை 10 மணி முதல் (இலங்கை நேரப்படி இரவு 7.30 அளவில்) இந்த முற்றுகை அமுலுக்கு வருகிறது.

ஈரானின் அனைத்துத் துறைமுகங்கள், அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா பகுதிகளில் உள்ள கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்துக் கப்பல்களும் இந்தத் தடைக்கு உட்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த நாட்டின் கப்பலாக இருந்தாலும், ஈரானியத் துறைமுகங்களுடன் தொடர்புகளைப் பேண முற்பட்டால் அவை பாரபட்சமின்றித் தடுத்து நிறுத்தப்படும் என மத்திய கட்டளைப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவதன் மூலம் ஈரானின் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முடக்குவதே அமெரிக்காவின் இந்த அதிரடித் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச சந்தைகளில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!

சித்திரை 10, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில்

ஆடி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

பாகிஸ்தானில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 17 பேர் பலி!

வைகாசி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

முதன்முறையாக உளவு அமைப்பை உருவாக்கும் ஜப்பான்!

ஆடி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube