Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

புரட்டாதி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆறு மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பான நிலை 3 (சிவப்பு) எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (21) மாலை 4.00 மணி முதல் நாளை (22) மாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலி மாவட்டத்தின் நெலுவ, களுத்துறை மாவட்டத்தின் வலல்லாவிட்ட, கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, தெரணியகல, மாவனெல்ல, யட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ, கொத்மலை கிழக்கு, கொத்மலை மேற்கு மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளுக்கும் எச்சரிக்கை பொருந்தும்.

இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேசத்துக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், குறிப்பாக பலத்த மழை பெய்யும் பகுதிகள் மற்றும் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படும் இடங்களில் உள்ளவர்கள் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் இன்று வேலைநிறுத்த போராட்டம்

புரட்டாதி 9, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – குற்றவாளிக்கு 32 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை!

ஆனி 25, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

குறைந்த ஓய்வூதிய ஒப்பீட்டு அறிக்கை – இலங்கைக்கு 120 ஆவது இடம்

ஆவணி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube