Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2030 இல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சிறை செல்லுவார்

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தற்போதைய அரசாங்கம் கவிழ்ந்ததும் 2030ஆம் ஆண்டில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நிச்சயமாகச் சிறை செல்வார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

குருநாகல், ஹிரியால தேர்தல் தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதிக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராகப் பேசிவிட்டு, ஆட்சிக்கு வந்த பின்னர் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழியமைத்துக் கொடுத்ததே இதற்கு முதன்மை காரணம் ஆகும். மேலும், கடந்த காலங்களில் சேகரிக்கப்பட்ட ஊழல் கோப்புகளை வைத்துக் கொண்டு அரசாங்கம் தனக்கு சாதகமான பேரம்பேசல்களில் ஈடுபட்டு வருகிறது.

நிதியமைச்சில் இடம்பெற்ற 2.5 மில்லியன் டொலர் அளவிலான ஹேக்கிங் தாக்குதலினால் மக்கள் தமது பணத்தை இழக்க நேரிட்டதற்கு, நாட்டின் நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பொறுப்பற்ற செயல்பாடே காரணம். இந்த நிதி இழப்பு மற்றும் முறையற்ற நிர்வாகத்திற்கு ஜனாதிபதி நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பொதுப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றத்திற்காகச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டதை, போன்று சட்டங்களையும் விதிகளையும் மீறி மக்களின் நிதியை வீணடித்த தவறுக்காக ஜனாதிபதி அனுர குமாரவும் எதிர்காலத்தில் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது அதிக அளவிலான வரிச்சுமையைச் சுமத்திப் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டு வருகிறது. எனவே, 2030ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, மக்கள் பண இழப்பு மற்றும் சட்டம் மீறல்களுக்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைக்குச் செல்வது உறுதி என பிரசாத் சிறிவர்தன அழுத்தமாகக் கூறியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

Google Maps செயலியில் புதிய Immersive Navigation வழிகாட்டி வசதி

ஆடி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

உக்ரைன் ஆயுத கிடங்கு மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்

ஆவணி 30, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஜப்பான் நிறுவன பிரதிநிதிகளுடன் முதலீட்டு பேச்சுவார்த்தை!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

20,30 ஆண்டுகளுக்கு தங்களது ஆட்சியை தக்கவைப்பதே இந்த அரசின் திட்டம் – நாமல் ராஜபக்ஷ

ஆடி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube