Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வடக்கு ஆளுநரின் வர்த்தமானி மீதான இடைக்கால நிவாரணங்கள் நீடிப்பு – நீதிமன்ற உத்தரவு

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வவுனியா மாநகர முன்னாள் முதல்வரை பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடை கட்டளைகளை வழக்கு முடிவடையும் வரை நீடித்து வவுனியா மேல்நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

வட மாகாண ஆளுநர் வேதநாயகன் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வவுனியா மாநகர முதல்வர் காண்டீபனின் பதவியை நீக்கியிருந்தார். அதற்கு எதிராக காண்டீபன் தரப்பினால் எழுத்தாணை மனு ஒன்று வவுனியா மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்தன.

அதன்படி மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் மூன்று இடைக்கால நிவாரணங்களை கடந்த ஜூலை மாதம் மேல் நீதிமன்றம் வழங்கியது.

அந்த வகையில் முதலாவதாக, காண்டீபன் முதல்வர் பதவியிலும் அல்லது உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்படுவது குறித்த வர்த்தமானி பிரசுரம் நீதிமன்றத்தினால் இடை நிறுத்தப்பட்டிருந்தது. இரண்டாவதாக, அந்த வர்த்தமானியின் அடிப்படையில் எதிர் மனுதாரர்கள் எந்த நடவடிக்கையினையும் எடுக்கக்கூடாது என்ற ஒரு தடை உத்தரவும் வழங்கப்பட்டது.

மூன்றாவதாக, காண்டீபனை பிரதியீடு செய்கின்ற வகையில் இன்னொரு முதல்வரை தெரிவுசெய்வதற்கோ நியமிப்பதற்கோ அல்லது உறுப்பினரை தெரிவுசெய்வதற்கோ எந்த நடவடக்கையும் எடுக்கக்கூடாது என்கின்ற இடைக்கால தடை உத்தரவுகள் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன் குறித்த விண்ணப்பத்தில் மாநகர முதல்வர் பதவி மீதான இடைக்காலத் தடைகட்டளைகளை நீடிப்பதா அல்லது அதனை விலக்குவதா என்பது தொடர்பாக கடந்த தவணைகளில் நீண்ட விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

அந்த இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி இருதரப்பு சார்பிலும் எழுத்துமூல சமர்ப்பணங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று அதன் மீதான கட்டளை வழங்கப்பட்டது. அந்த வகையில் முதல்வரை பதவி நீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளையினை வழக்கு முடிவடையும் வரை நீடித்து மேல் நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அது தொடர்பான வழக்கு தொடர்ந்து இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், மனுதாரர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி இ.தயாபரன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிக் கலன்கள் குறித்து தீவிர அவதானம்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹப்புத்தளை முருகன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் – கொழும்பு இடையே சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் பணிபகிஷ்கரிப்பில்

ஆடி 27, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ விபத்து!

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube