இன்று வியாழக்கிழமை(7) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்குச் சென்று உறவினர்களுடன் கஹவத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த வேன் ஒன்று களு கங்கை பாலத்தின் மீது பயணித்த வேளை வேன் எதிர்பாராத விதமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் விளிம்பில் சிக்கி நின்றுள்ளது. நூலிழையில் வேனில் பயணித்த 9 பேரும் விபத்திலிருந்து தப்பியுள்ளனர்.
