Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு கடற்பரப்பில் இடம்பெற்று வரும் கடற்கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

புரட்டாதி 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

மட்டக்களப்பு மாவட்ட கடற்பரப்பில் இடம்பெற்று வரும் கடற்கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றைத் தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் படகுகளின் நிறங்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினரான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

‘சண்டியன் இல்லாத சந்தியில் நொண்டியனும் சண்டியனாம்’ மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடற்கொள்ளை என்பது மிகவும் முக்கியமான பிரச்சினையாக உள்ளது. இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் பிரதேச மக்களுக்கு நன்கு தெரியும்.

கடந்த காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் வெளிப்படையாகப் பேசுவதற்குக் கூட அச்சம் நிலவியது, தற்போது இவ்விடயம் தொடர்பில் முன்வைக்கப்படும் முறைப்பாடுகளை மிகவும் அவதானத்துடன் அணுகி வருகின்றோம்.

கடற் கொள்ளையர்கள் தொடர்பாக தகவல் தமக்குக் கிடைத்தவுடன், பாதுகாப்பு அதிகாரிகளுடன் இது குறித்து உடனடியாகக் கலந்துரையாடினேன். இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினருடன் மேலும் விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிறிய படகுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்கொள்ளை நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்தப் படகுகளுக்கும் அனுமதி அட்டை நடைமுறையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். சிறிய படகுகளை இலகுவாக அடையாளம் காணக்கூடிய வகையில் அவற்றின் நிறங்களை மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறைகள் கூடிய விரைவில் அமுல்படுத்தப்படும்.

இவ்வாறான நடவடிக்கைகள் நடைமுறைக்கு வருவதன் மூலம் சட்டவிரோதமாகக் கடற் கொள்ளையில் ஈடுபடுகின்றவர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுடன், சட்டபூர்வமாகக் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

இதேவேளை, கடற்கொள்ளைச் சம்பவங்களுடன் சில பாதுகாப்புப் படையினரும் தொடர்புபட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கும்போது, பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த சிலர் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீனவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது.

இத்தகைய குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் படையினர் எந்தப் பிரதேசத்தில் பணியாற்றுகின்றனர். அவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்பன உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் கைது

புரட்டாதி 18, 2026
இலங்கை

கின்னஸ் உலக சாதனையுடன் “சங்கமம் 2026” – காலி முகத்திடலில் வரலாற்றுச் சாதனை!

ஆனி 14, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

Google Trending இல் விஜய்!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொகவந்தலாவையில் பரபரப்பு: அஸ்வசும நிதியை முறைகேடு செய்த கணவன், மனைவி உடனடி பணிநீக்கம்!

புரட்டாதி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube