Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

லாஃப் சமையல் எரிவாயு விலையேற்றத்தை கண்டித்து 11 ஆம் திகதி போராட்டம்!

laugfs gas | Price Increase | Protest | SriLanka | QuickTamilNews

வைகாசி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

லாஃப் மஞ்சள் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர்வரும் திங்கட்கிழமை (11) லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரிய போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (7) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் வர்த்தக அமைச்சரால் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் லாஃப் நிறுவனம் தன்னிச்சையாக செயற்படுகிறது. இதற்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். போதியளவு எரிவாயு சிலிண்டர்கள் கிடைக்காத நிலையில் விலையை மட்டும் உயர்த்துவதில் பயனில்லை. சந்தையில் நீல நிற சிலிண்டர்கள் போதியளவு காணப்படுவதனால் நுகர்வோர் தன்னிடமுள்ள வெற்றுச் சிலிண்டர்களை நிறுவனத்திடமே ஒப்படைத்து விட்டு தற்போதைய சந்தை விலைக்குரிய பணத்தை பெற்றக்கொள்ள வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் இறுதி எச்சரிக்கை விடுக்கும் வகையில் சிவில் அமைப்புகளுடன் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை லாஃப்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு பாரியளவில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதுடன், செவ்வாய்க்கிழமை வர்த்தக அமைச்சுக்கு முன்பாகவும் போராட்டத்தை முன்னேடுக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

வணிகம் மற்றும் மனித உரிமைகள் மீதான தேசிய வழிகாட்டல்கள், பரிந்துரைகள் வெளியீடு – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை!

ஆடி 4, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கொட்டகலையில் இலவச கருத்தரங்கு – 140க்கும் மேற்பட்ட உயர்தர மாணவர்கள் பங்கேற்பு!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

ஆவணி 7, 2026
இலங்கைவானிலை

100 மில்லிமீட்டர் அளவில் பலத்த மழை!

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube