இந்தியாவின் தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூர் பகுதியில் உலகப் புகழ்பெற்ற பாலாப்பூர் விநாயகர் லட்டு ஏலம் நடைபெற்றுள்ளது.
இதில் 21 கிலோ எடை கொண்ட இந்த பிரசாத லட்டு, சாதனையாக 39 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
‘அர்பன் குரூப்’ (Urban Group) நிறுவனத்தின் உரிமையாளரான சாமா பிரணீத் ரெட்டி என்பவர் இந்த லட்டை ஏலத்தில் வென்றெடுத்துள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு இந்த இலட்டு 35 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போன நிலையில், இந்த ஆண்டு 4 இலட்சம் ரூபாய் கூடுதலாக ஏலம் கேட்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
