(கனகராஜா சரவணன்)
மட்டக்களப்பில் 6 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அவரது 66 வயதுடைய தாத்தாவை எதிர்வரும் 9ம் திகதிவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நேற்று சனிக்கிழமை (26) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவது,
மட்டக்களப்பின் பிரதேசம் ஒன்றில் குறித்த சிறுமியின் தாயார் குழந்தை பெற்று 3 மாதமாகிய நிலையில் குழந்தையை கிளினிக்க்காக வைத்தியசாலைக்கு சம்பவ தினமான 24 ம் திகதி கொண்டு செல்வதற்காக 6 வயது சிறுமியை கணவனின் தாயாரை அழைத்து அவரின் பாதுகாப்பில் விட்டுவிட்டு கணவருடன், வாழைச்சேனை வைத்தியசாலைக்கு சென்று பின்னர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் வீட்டில் கணவரின் தாய் வீட்டில் இல்லாத நிலையில், சிறுமியை அவரது தாத்தா பாலியல் துஷ்பிரயோகம் செய்வதை கண்டு அதிர்சியடைந்ததுடன், அவரை அடித்து தாக்கியதையடுத்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு 25ம் திகதி வெள்ளிக்கிழமை முறையிட்டதையடுத்து அவர் பொலிசாரிடம் தெரிவித்த நிலையில், சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாத்தாவை கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதில் கைது செய்யப்பட்வரை நீதவான் நீதிமன்றில் சனிக்கிழமை (26) முன்னிலைப்படுத்தியதை அடுத்து, அவரை எதிர்வரும் 9 ம் திகதிவரை விளக்கமறியலில் கைவக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
