பதுளை மாவட்டத்தின் ஊவபரணகம பிரதேச செயலாளர் பிரிவின் அலகொல்லை தோட்டத்தில் 51 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது.
”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் செயல்படுத்தப்படும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் 10,000 வீடுகள் வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன .
அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, அம்பிகா சாமுவேல், இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சரண்யா மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
