Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கை

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆலோசித்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு மேலும் ஒரு விமானத்தாங்கி போர்க்கப்பலை அனுப்ப பென்டகன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ‘யு.எஸ்.எஸ். தியோடோர் ரூஸ்வெல்ட்’ (USS Theodore Roosevelt) கப்பல் உள்ளடங்கிய தாக்குதல் குழு அமெரிக்காவின் சான் டியாகோ துறைமுகத்திலிருந்து புறப்பட்டுள்ளதாக ‘வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல்’ செய்தி வெளியிட்டுள்ளது.

சுமார் 9,000 முதல் 10,000 இராணுவ வீரர்களைக் கொண்ட இத்தாக்குதல் குழு, எதிர்வரும் நவம்பர் மாதம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக்கப்பல், பிராந்தியத்தில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டுள்ள கப்பலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுமா அல்லது அமெரிக்க இராணுவப் பலத்தை மேலும் அதிகரிப்பதற்காக அனுப்பப்படுகிறதா என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.

தற்போது ‘யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ்’ (USS George H.W. Bush) மற்றும் ‘யு.எஸ்.எஸ். ஜோர்ஜ் வொஷிங்டன்’ (USS George Washington) ஆகிய இரண்டு அமெரிக்க . வானூர்தி தாங்கி போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6 மாதங்களில் 11 இலட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி கடவுச்சீட்டு விவகாரம் – அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளருக்கு விளக்கமறியல்!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்

புரட்டாதி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube