Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மலையக மக்களை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டவருக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு – ஜீவன் தொண்டமான்

ஐப்பசி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மலையகத் தமிழ் மக்களை சாதி மற்றும் தொழில் அடிப்படையில் இழிவுபடுத்தும் வகையில் அண்மையில் சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டதாகக் கூறப்படும் தனிநபருக்கு எதிராக, “S3-ICCPR” சட்டத்தின் கீழ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (02) பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸ்மா அதிபரின் “Tell IGP – Sri Lanka Police” முறைப்பாட்டு இணையத்தளத்தின் ஊடாக இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜீவன் தொண்டமான் அளித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக்கொண்டுள்ளதுடன், அதற்கான குறிப்பு இலக்கத்தையும் (Reference Number) அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஜீவன் தொண்டமான் பின்வருமாறு விடயங்களை முன்வைத்து முறைப்பாடு செய்துள்ளார்…

குறித்த நபரால் முகநூலில் (Facebook) பகிரப்பட்டுள்ள ஒரு பொது பதிவைத் தொடர்புகொண்டு முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

குறித்த பதிவில் மலையகத் தமிழ் சமூகத்தை இலக்காகக் கொண்டு இழிவான மற்றும் பாகுபாடான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, “இங்கு வந்து கழிப்பறைகளைச் சுத்தம் செய்து, தேயிலை பறிக்க வந்தவர்கள்” எனக் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வார்த்தைப் பிரயோகமும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் மலையகத் தமிழ் சமூகத்தை இழிவுபடுத்துவதுடன், அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகவும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் நான் கருதுகிறேன்.

குறித்த பதிவின் screenshot-ஐ நான் ஆதாரமாகப் பாதுகாத்து வைத்துள்ளேன். அத்துடன், குறித்த Facebook பதிவின் அசல் URL மற்றும் சம்பந்தப்பட்ட Facebook சுயவிவரத்தின் விபரங்களையும் தேவையான ஆதாரங்களாக வழங்க முடியும்.

எனவே, குறித்த Facebook பதிவை இலங்கை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி, நடைமுறையில் உள்ள சட்டங்களின் கீழ் ஏதேனும் குற்றம் இடம்பெற்றுள்ளதா என்பதைத் தீர்மானிக்குமாறும், குற்றம் இடம்பெற்றுள்ளதாகக் கண்டறியப்பட்டால், சட்டத்திற்கு அமைவாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என முறைப்பாடு செய்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் : முதலாவது 20 க்கு 20!

ஆனி 12, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அயோத்தி ராமர் கோவிலின் பிரசாதம் என போலியான இனிப்புகளை விற்பனை செய்த அமேசன் நிறுவனத்துக்கு அபராதம்

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயதுடைய இளைஞர் கைது

ஆவணி 20, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்தியாவில் அறிமுகமாகும் பிளாஸ்டிக் நாணயத்தாள்கள்

ஆடி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube