ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வெற்றிகொண்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களை பெற்றது.
இந்திய அணி சார்பில் அபிஷேக் சர்மா அதிகப்பட்சமாக 61 ஓட்டங்களை அணிக்காகப் பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
இந்திய அணி தங்கப் பதக்கத்தையும் இரண்டாவது இடத்தை பிடித்த பாகிஸ்தான் அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
இதேவேளை இலங்கை அணி மூன்றாம் இடத்திற்கான போட்டியில் 63 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
