நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றுதல் மற்றும் பதிவு செய்தல் தொடர்பான புதிய சட்டமூலத்தின் சில சரத்துக்கள் காரணமாக, தற்போது நாட்டில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசர்நாய் நோய் (Rabies) கட்டுப்பாட்டு திட்டத்திற்கு தடைகள் ஏற்படக்கூடும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே , நாட்டில் விசர்நாய் நோயை முழுமையாக ஒழிக்கும் இலக்கை அடையும் நெருங்கிய தருணத்தில் இலங்கை உள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனவே, இந்தச் சட்டமூலத்தின் குறிப்பிட்ட சரத்துக்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதுள்ள தடுப்பூசி ஏற்றும் திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், இந்தச் சட்டமூலத்தில் உடனடியாக தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் பிரசாத் கொலம்பகே வலியுறுத்தினார்.
