Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனோஜனின் மரணதண்டனை தொடர்பான சட்ட முன்னெடுப்புகளுக்காக சவூதி செல்லும் குழு

ஐப்பசி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்த சட்ட முன்னெடுப்புக்களுக்காக, இரு ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட நால்வரடங்கிய விசேட குழு எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி செல்லவுள்ளது. ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் இக்குழுவில் அடங்குகின்றனர்.

அனோஜனுக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஏற்பாடுகள் குறித்து இதன் போது ஆழமாக ஆராயப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும கேசரி வார வெளியீட்டுக்கு தெரிவித்தார்.

தற்போது இடம்பெற்று வரும் வழக்கு விசாரணைகளுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி, பொது மன்னிப்பிற்கான கோரிக்கையை எவ்வாறு சவுதி மன்னர் தலைமையிலான அரசாங்கத்திடம் முன்வைப்பது என்பது குறித்த சட்ட நடைமுறைகள் குறித்தே நாம் ஆராயவுள்ளோம். இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட கடிதத்தையும் கொண்டு செல்லவுள்ளோம் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும தெரிவித்தார்.

இக்குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவூதி அரேபியாவிலுள்ள இரண்டு சட்டத்தரணிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனோஜன் சிவராசாவின் விடுதலையை உறுதி செய்ய தேவையான அரச தலையீட்டை மேற்கொள்ளுமாறு கோரி, ராமஞ்ஞ மகா நிகாய மற்றும் அமரபுர மகா நிகாயவின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் மனுவொன்றைக் கையளித்தனர்.

அவரது தண்டனையைக் குறைக்கக் கோரும் மேல்முறையீடொன்று சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் இவ்விவகாரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இராஜதந்திர வழிகள் ஊடாக சவூதி அதிகாரிகளுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

நுவரெலியா மாவட்டத்திற்கு பல்கலைக்கழகம் கோரி கையொப்ப சேகரிப்பு இயக்கம்!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

செம்மணி புதைகுழி: மேலும் 7 என்புக்கூடுகள் அகழ்வு!

ஆனி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

லியோனல் மெஸ்ஸியின் உலகக்கிண்ண வரலாற்று சாதனை!

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube