Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மாணவர் குழுவை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க முடியாத நிலை

ஐப்பசி 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்

 

பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணப்படாத நிலையில், 2025 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மாணவர் குழுவை இன்னும் பல மாதங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க முடியாத நிலை காணப்படுவதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் செயலாளர் சி.பி. இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் காரியாலயத்தில் இன்று சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.செய்தி சந்தா

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு 2025 ஆம் ஆண்டு மாணவர் குழுவை கடந்த செப்டெம்பர் மாதத்தில் உள்வாங்குமாறு பல்கலைக்கழகங்களுக்கு அறிவித்திருந்தது. ஆனால் தற்போதைய நிலைமையில் செப்டெம்பர் மாதம் மாத்திரமன்றி, இந்த மாணவர்களை எப்போது உள்வாங்க முடியும் என்பதுகூட எங்களுக்குத் தெரியாது.

பல்கலைக்கழகங்களில் இருக்க வேண்டிய மாணவர் குழுக்களின் எண்ணிக்கையைவிட தற்போது அதிகமான மாணவர் குழுக்கள் உள்ளன. நான்கு மாணவர் குழுக்கள் இருக்க வேண்டிய இடங்களில் ஐந்து, ஆறு குழுக்கள் வரை உள்ளன. அழகியல் கலைப் பல்கலைக்கழகத்தின் ஒரு பீடத்தில் 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை மாணவர்களின் முதலாம் வாரக் கல்வி நடவடிக்கைகளே கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் 2025 ஆம் ஆண்டு மாணவர் குழுவை எவ்வாறு செப்டெம்பர் மாதத்தில் உள்வாங்க முடியும்?

எனவே, தற்போது நாம் ஆராய்ந்துள்ள விடயம் என்னவென்றால், 2025 ஆம் ஆண்டு மாணவர் குழுவை இன்னும் பல மாதங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க முடியாது என்பதாகும். அதேவேளை, 2026 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையும் நிறைவடைந்துள்ளதால் அந்த மாணவர் குழுவும் இந்த நெருக்கடியுடன் இணையும்.

உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்த மாணவர்கள் ஏற்கனவே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலை தொடருமானால், சில மாணவர்கள் நான்கு ஆண்டுகள் வரை பல்கலைக்கழகத்துக்கு செல்லாமல் வீடுகளில் இருக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இது மாணவர்களின் காலத்தை வீணடிப்பதுடன், நாட்டில் பாரதூரமான சமூகப் பிரச்சினையையும் உருவாக்கும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மாணவர்களை உள்வாங்குமாறு அறிவுறுத்தினாலும், தற்போதைய சூழ்நிலையில் பல்கலைக்கழகங்களால் அவர்களை உள்வாங்க முடியாது. கடந்த சில வருடங்களாக நான்கு, ஐந்து, ஆறு மாணவர் குழுக்களை நிர்வகிப்பதற்காக பல்கலைக்கழக ஆசிரியர்கள் தாங்க முடியாத அளவுக்கு பாரிய பணிச்சுமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இனிமேலும் இவ்வாறான நிலைமையில் பணியாற்றுவதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் தயாராக இல்லை என சி.பி. இலங்கசிங்க மேலும் சுட்டிக்காட்டினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அலகொல்லையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம்!

புரட்டாதி 29, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

பிரிட்டன் செல்லும் முதலமைச்சர் விஜய்

புரட்டாதி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல் எம்.பிக்கு விளக்கமறியல் நீடிப்பு

புரட்டாதி 29, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube