Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பின் 7 பேர் கைது!

Dubai | Suddha | Narcotics | Arrested | SriLanka | #QuickTamilNews

வைகாசி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

போதைப்பொருள் கடத்தல்காரரான டுபாய் சுத்தாவின் போதைப்பொருள் வலையமைப்பில், பண்டாரகம பகுதிக்கான பிரதான விநியோகஸ்தர் உள்ளிட்ட ஏழு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பண்டாரகம – வெல்மில்ல அலோதியாவ பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் நபர்கள் தங்கியிருப்பதாக பண்டாரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 15 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 50 கிராம் ஹெரோயின், 25 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் பொதியிடப் பயன்படுத்தப்படும் விசேட காகிதங்கள், பொலித்தீன் உரைகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் 04 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஒரு சொகுசு கார் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருட்களை பொதியிடும் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த ஏழு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் அனைவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதுடன், பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

திருகோணமலை வைத்தியசாலையின் சாதனை – 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் நீக்கம்

ஆவணி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

வரதட்சிணை கொடுமை! 3-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

வைகாசி 18, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தீயணைப்பு அவசர இலக்கம் செயலிழப்பு!

ஆடி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube