Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை ஒழிக்குமாறு கோரி – ஆர்ப்பாட்டம்

அக்டோபர் 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பு திராய்மடு கிராமத்தில் (சுவிஸ் கிராமம்) நீண்டகாலமாக பொலிசாரின் ஆதரவுடன் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) மற்றும் போதைப்பொருள் விற்பனை இடம் பெற்று வருகிறது எனவே இதனை இல்லாது ஒழிக்குமாறு கோரி திராய்மடுவில் நேற்று சனிக்கிழமை கிராம மக்கள் ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு ஊழல் மோசடிக்கு எதிரான அமைப்பின் ஏற்பாட்டையடுத்து நேற்று மாலை 5.00 மணிக்கு திராய்மடுவில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று திரண்டனர். சட்டவிரோத மதுபான விற்பனையால் சிறுவர்களின் கல்வி பாதிப்பு இந்த வியாபாரத்தை முற்றாக பொலிசார் ஒழிக்க வேண்டும்.

இந்த சட்டவிரோத வியாபாரிகளுடன் சில பொலிசாருக்கு தொடர்பு உள்ளது எனவே இதற்கு எதிராக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சட்டவிரோத கசிப்பு வியாபாரத்தால் கிராமமே அழியும் எனவே சர்வதேச மது ஒழிப்பு தினமான இன்று சட்டவிரோத மதுபான விற்பனையில் இருந்து கிராமத்தை பாதுகாத்து தரவும்.

சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் இரவில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்கள் கைகளை பிடித்து இழுத்து ஒரு இலட்சம் தருவதாக அட்காசம் புரிந்து வருகின்றனர்.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடு தொடர்பாக கொக்குவில் பொலிசாருக்கு முறைப்பாடு தெரிவித்தும் பொலிசார் கசிப்பு வியாபாரி மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே சட்டவிரோத மதுபான வியாபாரிகள் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் பொலிசாரிடம் இருந்து இந்த கிராமத்தை ஜனாதிபதி பாதுகாத்து தருமாறு கோஷங்கள் எழுப்பி சுலோகங்கள் ஏந்தியவாறு ஒரு மணித்தியாலம் மாலை 6.00 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து விட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்

மே 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் பரிசோதனைக்கு அதிநவீன நடமாடும் ஆய்வுகூட வாகனம்

ஆகஸ்ட் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எம்பிலிப்பிட்டியவில் தீவிபத்து – 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

ஜூன் 3, 2026
இலங்கை

அனோஜனின் மரண தண்டனைக்கு எதிராகத் தமிழகத்தில் வலுக்கும் குரல்!

அக்டோபர் 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube