Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

99வது ஆஸ்கார் விருதுகளுக்கு இலங்கையின் அதிகாரப்பூர்வப் படமாக ‘ரிவர்ஸ்டன்’ தேர்வு!

அக்டோபர் 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் லலித் ரத்நாயக்க இயக்கிய ‘ரிவர்ஸ்டன்’ (Riverstone) திரைப்படம், 99வது
ஆஸ்கார் அகடமி விருதுகளுக்கான இலங்கையின் அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையின் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தத் தேர்வு National Oscars Selection Committee of Sri Lanka – NOSCSL என்ற ஒன்பது பேர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திரைப்படத் துறையைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விமர்சகர்கள், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட விழா நிபுணர்கள் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

இலங்கையின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் சமர்ப்பிப்பைத் தெரிவு செய்வதற்காக மொத்தம் ஆறு திரைப்படங்கள் பரிசீலிக்கப்பட்டன.

அவை ‘Riverstone’, ‘Father’, ‘Cricket Saadhu’, ‘Anthony’, ‘Ayu’ மற்றும் ‘Vihaga Premaya’ ஆகிய திரைப்படங்களாகும்.

இதில், ‘Ayu’ மற்றும் ‘Vihaga Premaya’ திரைப்படங்கள் அகாடமி விருதுகளுக்கான தகுதி விதிமுறைகளை பூர்த்தி செய்யாததால் தகுதியற்றதாக அறிவிக்கப்பட்டன.

 

இதனையடுத்து, தகுதி பெற்ற நான்கு திரைப்படங்களில் இருந்து ‘Riverstone’ மற்றும் ‘Father’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் இறுதிக்கட்ட பரிசீலனைக்காகத் தெரிவு செய்யப்பட்டன.

இறுதியாக, குழுவின் ஒன்பது உறுப்பினர்களின் சுயாதீன வாக்கெடுப்பின் மூலம் ‘Riverstone’ திரைப்படம் ஒருமனதாக இலங்கையின் அதிகாரப்பூர்வ சமர்ப்பிப்பாகத் தெரிவு செய்யப்பட்டதாக தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தப் புதிய தேசியத் தெரிவு நடைமுறையின் கீழ் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் திரைப்படம் ‘Riverstone’ என தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதத் மஹாதிவுல்வெவ தெரிவித்துள்ளார்.

சர்வதேச திரைப்படப் பிரிவுக்கான அனைத்து நாடுகளின் சமர்ப்பிப்புகளும் அகாடமியின் விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும். 99வது ஆஸ்கர் விருது விழா 2027 மார்ச் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

இலங்கைத் திரைப்படத்துறைக்கு சர்வதேச அரங்கில் மற்றுமொரு முக்கியமான வாய்ப்பாக இந்தத் தெரிவு அமைந்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

17 வெற்று கொள்கலன்கள் கடலில் விழுந்து மிதப்பதாக எச்சரிக்கை!

ஆகஸ்ட் 1, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்க மத்திய ஃப்ளோரிடா கடற்பகுதியில் தனியார் விமானமொன்று விபத்திலுள்ளானது!

மே 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்அறிக்கை

ஆகஸ்ட் 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

யோஷித ராஜபக்ச CID-க்கு வருகை!

ஆகஸ்ட் 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube