கட்டுகஸ்தோட்டை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை (6) காலை 9 மணி முதல் எதிர்வரும் 8ஆம் திகதி காலை 9 மணி வரை 48 மணி நேரத்திற்கு சில பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, உடுவாவல, ராஜபிஹில்ல மற்றும் கொனிகொட ஆகிய பகுதிகளில் நீர்விநியோகம் தடைப்படும்.
எனவே, பொதுமக்கள் சேமித்து வைத்துள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
