மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையினால் கலஹா – தெல்தோட்டை வீதியில் அமைந்துள்ள பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்துள்ளதைத் தொடர்ந்து, அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் முற்றிலும் தடைப்பட்டுள்ளன.
பேராதனை–தெல்தோட்டை வீதியில் அமைந்துள்ள கலோ ஓயா பாலத்தில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையிலேயே, பாலத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பகுதி வெள்ளப் பெருக்கினாலும் கடும் மழையினாலும் சரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உடைந்த பாலப் பகுதியைச் சீரமைக்கும் பணிகள் மற்றும் தற்காலிகப் போக்குவரத்து வழிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
