Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சவூதி சிறையில் அனோஜன் தாக்கப்பட்டதாக தகவல் – அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன் சிறையில் தாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) உரையாற்றிய அவர், அனோஜனின் குடும்பத்தினர் சிறையில் கத்தியால் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், சவூதி சிறைச்சாலை தரப்பு நகக் கீறல்களால் காயம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளதாக கூறினார்.

அனோஜனின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், அவரை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், சவூதி அரேபியாவுக்கு விசேட குழுவை அனுப்புவது தொடர்பில் முன்னர் அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு சவூதி தரப்பின் அனுமதி கிடைத்துள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அரசாங்கம் தெளிவான பதிலை வழங்க வேண்டும் என சாணக்கியன் இராசமாணிக்கம் கோரிக்கை விடுத்தார்.

அனோஜனை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

முக்கியச் செய்திகள்விளையாட்டு

“ஸ்ட்ரெச்சர் கூட இல்லையா?”

செப்டம்பர் 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிள்!

ஜூன் 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பூப்பறிக்கச் சென்ற 4 பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஜூலை 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ஆகஸ்ட் 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube