Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல், கம்மன்பில, திலித் உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு கோட்டை நீதவானால் முன்வைக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு முறைப்பாடு தொடர்பில் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிரான வழக்கு இன்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர்களான சமத் மொராயஸ், ஆதித்ய படபெந்திகே ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்கில் தொடர்புடைய தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு தேவையான ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டது.

ஆவணங்கள் மற்றும் தகவல்களை வழங்கும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

அத்துடன், குறித்த தரப்பினர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்கள் மற்றும் சட்ட ரீதியான கருத்துக்களை ஆராய்வதற்காக வழக்கு ஒக்டோபர் 23ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“Clean North” செயற்திட்டத்தினூடாக காங்கேசன்துறையை அழகு படுத்தும் வேலைத்திட்டம்!

மே 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல்-நினோ காலநிலை மாற்றத்திற்கு தயார் – வசந்த சமரசிங்க!

ஜூன் 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி சிறைக்குள் வீசப்பட்ட பொதி

ஜூலை 15, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகம் பிரதமர் ஹரிணிக்கு அழைப்பு

அக்டோபர் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube