Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

‘ஜெயிலர் 2’ படத்திற்கு UA 16+ சான்றிதழ் – வெளியீட்டுக்கு தயாராகும் ரஜினியின் படம்

அக்டோபர் 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், படத்திற்கு UA 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ரஜினிகாந்த் மீண்டும் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான டிரெய்லரில் அதிரடி காட்சிகளுடன் புதிய கதாபாத்திரங்களும் இடம்பெற்றுள்ளன. எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சூரஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்ட பலர் படத்தில் இணைந்துள்ளனர். மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோரும் தங்களது முந்தைய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார். ஒளிப்பதிவை விஜய் கார்த்திக் கண்ணன் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, வழக்கமான பிரம்மாண்ட இசை வெளியீட்டு நிகழ்வுக்கு பதிலாக, திரைப்படக் குழுவினருடன் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி ஒக்டோபர் 9ஆம் திகதி SunNXT தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான சட்டமூலம் விரைவில்

ஜூலை 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சிவப்பு பிடியாணை

ஆகஸ்ட் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் ஒருவர் பலி!

ஜூன் 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நீக்குமாறு SLPP கோரிக்கை!

மே 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube