கொடபொல சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒரு வகை வைரஸ் தொற்று பரவிவருவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபேம வெள்ளிக்கிழமை (8) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
கொடபொல பகுதியில் பதிவாகியுள்ள காய்ச்சலானது ‘மெனின்ஜைடிஸ்’ வைரஸ் நிலைமை என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 47 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஆகியன இதன் முக்கிய அறிகுறிகளாகும். குறிப்பாக 14 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களிடையே இது வேகமாகப் பரவியுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் தெனியாய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதோடு, அவர்களில் பெரும்பாலானோர் தற்போது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸானது அசுத்தமான நீர் அல்லது உணவு மூலமே பரவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
