உயர் எரிசக்தி விலைகள், அதிகரித்து வரும் அரச கடன் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் அதிகரிக்கும் முதலீடுகள் ஆகியவை உலக பொருளாதாரத்திற்கு புதிய அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்களால் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உலகளாவிய பணவீக்க அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவு துறையின் விரைவான வளர்ச்சி உலக பொருளாதாரத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கினாலும், வேலைவாய்ப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் நிதிச் சந்தை நிலைத்தன்மை தொடர்பில் அபாயங்களையும் ஏற்படுத்தக்கூடும் என IMF சுட்டிக்காட்டியுள்ளது.
உலகளாவிய பொருளாதார வளர்ச்சி தொடர்பான புதிய கணிப்புகளை IMF எதிர்வரும் கூட்டங்களில் வெளியிடவுள்ளது.
