பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான இடமாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
அதன்படி, கொழும்பு 05, தொழிலாளர் செயலகக் கட்டிடத்தின் 7ஆவது மாடியில் அமைந்துள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழான தடுப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
