முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்ற வளாகத்தில் ஒரு கண்ணை மூடிய நிலையில் காணப்பட்டதாக ஜன பலய அமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிரான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் ஒரு கோடி ரூபாய் நிதி தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், ஷிரந்தி ராஜபக்ஷ தொடர்பான குற்றச்சாட்டுகள் மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
